1987 ஆம் ஆண்டில், மிரிஸ்வத்த பண்ணை, கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்திற்குச் சொந்தமான தேசிய கால்நடை அபிவிருத்திச் சபையினால் கையகப்படுத்தப்பட்டது. இந்த பண்ணையில் சிறிய அளவிலான கோழி குஞ்சு பொரிப்பகம் செயல்பட்டு வந்தது. பின்னர், நெதர்லாந்து அரசாங்கத்தின் உதவியுடன் ஒரு பெரிய இன்குபேட்டர் மற்றும் பிற உபகரணங்கள் பரிசாக வழங்கப்பட்டன, அதன் மூலம் குஞ்சு பொரிப்பகம் விரிவுபடுத்தப்பட்டது. மொரகஹஹேன சந்தியிலிருந்து பாதுக்க மில்லவ வீதியில் சுமார் 2 கிலோமீற்றர் தொலைவில் இந்தப் பண்ணை அமைந்துள்ளது.